| |
|
|
அல்ஹதீத்

நபிகள்
நாயகம் அவர்கள் தம் வாழ்வில் சொல்லிக் காட்டியதும் செயல்படுத்தி
காட்டியதும் அல்லது அண்ணலின் முன்னிலையில் ஒரு செயல் நிகழ்வுற்று அவர்களின்
அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்ட அனைத்தும் அல்ஹதீத் என்பதில் அடங்கும்
قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله'
நபியே நீங்கள் சொல்லுங்கள் நீங்கள் அல்லாஹ்வை
நேசிப்பீர்களானால் என்னை பின்பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் "
(3:31) 'அவர்கள் தம் இச்சைப்படி (எதையும்) பேசுவதில்லை. அது அவருக்கு வஹீ
மூலம் அறிவிக்கப்பட்டதே அன்றி வேறில்லை (53; : 3,4) இவ்விரு வசனங்கள்
இறைத்து}தரின் சொல் செயல்களை அப்படியே பின்பற்றுவது அவசியத்திலும் அவசியம்
என்பதை வலியுறுத்துகிறது.
அல்குர்ஆனை மட்டும் பின்பற்றி நடப்பதென்றால் கூட
அதற்கும் அல்ஹதீத் அவசியம்; ஏனெனில், முதஷாபிஹாத் என்ற ஆழமான, அரபுக்
கவிஞர்களால் கூட விளங்க முடியாத வசனங்கள் பல உண்டு அவைகளுக்கு மிகத்
தெளிவான விளக்கம் அண்ணல் நபியின் அமுத மொழிகளால் மட்டும் தான் உண்டு.
அதுமட்டும் அன்றி அருள்மறை ஒரு விஷயத்தை பொதுவாகத்தான் கூறும். உதாரணமாக
اقيموا الصلاة
தொழுகையை நிலைநாட்டுங்கள் என்று தான் கூறுகிறது.
எப்பொழுது தொழ வேண்டும், எப்படி தொழ வேண்டும் என்பதை தெளிவு படுத்துவது
ஹதீததான். இது போன்று எத்தனையோ வசனங்கள் உள்ளன.
ஸஹாபாக்கள் அண்ணலாரின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்து மனதில்
தேக்கி கொண்டார்களே தவிர பதிவு செய்யவில்லை. அதற்கு தெளிவான காரணங்கள்; பல
உண்டு
-
எழுதப்படிக்கத்
தெரிந்த மிகச் சில ஸஹாபிகள் குர்ஆனை எழுதுவதில் அதிக கவனம்
செலுத்தினார்கள். எழுதப்படும் பொருள்களும் எழுதும் கருவிகளும் மிகக்
குறைவாக இருநததால் அதுவே கஷ்டமானதாக இருந்தது.
-
ஹதீஸ்கள்
எழுதுவது என்றால் நபித்துவம் கொடுக்கப்பட்டதி லிருந்து நபியின் மரணம்
வரை ஒவ்வொரு சொல், செயல்களையும் எழுத வேண்டும் அவைகளை ஓர் ஏட்டில்
அடக்குவதென்பது சாத்தியமற்றது.
-
குர்ஆன் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ஹதீது
எழுதப்பட்டால் ஒன்றோடொன்று பிசகிவிடுமோ என்ற அச்சம் இது தான் முக்கிய
காரணமும் கூட.
நபியவர்கள் கூறியதாக அபூஸயீதுல் குத்ரி அவர்கள் அறிவிக்கிறார்கள் 'என்னைத்
தொட்டும் நீங்கள் எழுத வேண்டாம் குர்ஆன் அன்றி என்னைப் பற்றி நீங்கள்
எழுதியிருந்தால் அதை அழித்துவிடுங்கள். என்னைப் பற்றி செய்திகளை
அறிவித்துக் கொள்ளுங்கள் என்றார்கள். இவ்வாறு தடுத்த நபிகளார் சில
ஸஹாபிகளுக்கு அனுமதி அளித்தும் உள்ளார்கள்.ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு
அம்ரிப்னுல் ஆஸ் அவர்கள் அறிவிக்கிறார்கள் நான் நபிகளாரிடமிருந்து
செவியுறும் ஒவ்வொன்றையும் எழுதுபவனாக ஆகியிருந்தேன். அச்சமயம் குறைஷிகள்
கூறினார்கள், நபியவர்களும் ஓர் மனிதர்தான் அவர்கள் கோபத்தோடும் பேசுவார்கள்,
பொருத்தத்தோடும் பேசுவார்கள் எனவே நீங்கள் எழுதுவதை விட்டுவிடுங்கள்
என்றனர் எனவே நானும் விட்டுவிட்டேன் இதை நான் நபியவர்களிடம் கூறினேன்.
நபியவர்கள் விரலால் சைக்கினை செய்து நீங்கள் எழுதுங்கள் அல்லாஹ்வின் மீது
ஆணையாக அதிலிருந்து உண்மையே தவிர வெளியாகாது என்றார்கள். மேலும் அபூஹுரைரா
அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹாபிகளில் எவரும் என்னை விட அதிக ஹதீதுகளை
உடையவராக இல்லை என்றாலும் அப்துல்லாஹ் இப்னு உமர் அவர்களும் அதிக ஹதீதுகளை
உடையவராக இருந்தார்கள். அவர்கள் ஹதீதுகளை எழுதிவைத்திருந்தார்கள் நான்
எழுதி வைத்திருக்கவில்லை என்கிறார்கள். ஹதீதுகளை எழுதுவதை
தடுத்திருப்பதையும், அனுமதித்திருப்பதையும் மேற்சொன்ன ஹதீத்கள்
தெளிவுபடுத்துகின்றன. இதன் மூலம்,குர்ஆனுடன் ஒன்றாகவோ அல்லது அது இறங்கும்
நேரத்திலே இரண்டும் பிசகிவிடும் என்பதாலோ எழுதுவது தடுக்கப்பட்டிருந்தது.
என்பதும் விளங்குகிறது. நபியவர்களின் மரணத்தின் பின் ஸஹாபிகள் பல
நாடுகளிலும் வாழ ஆரம்பித்தார்கள். அங்கெல்லாம் தம் நினைவுகளில் வைத்திருந்த
நபிகளாரின் வழிமுறைகளை அறிவிப்புகளின் வாயிலாக பரப்பினார்கள்.ஹழ்ரத்
அபூஹுரைரா அவர்கள், அன்னை ஆயிஷா நாயகி, இப்னு அப்பாஸ் அவர்கள் அப்துல்லாஹ்
இப்னு அம்ர் அவர்கள் அனஸ் போன்றோர் ஹதீதுகளை அறிவிக்கும் ஸஹாபிகளில்
மிகப்பிரபலமானவர்கள். ஹதீதுகளை திரட்டுவதா? வேண்டாமா? என ஸஹாபிகளுக்கு
மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தது. எனவே உமர் அவர்கள் தங்கள் ஆட்சி
காலத்தில் ஸஹாபிகளை அழைத்து ஆலோசித்து அதன் முடிவில் கூறுகிறார்கள். வேதம்
கொடுக்கப்பட்ட மக்களில் சிலர் தங்கள் வேதத்துடன் ஒரு கிதாபை எழுதி, அந்த
வேதத்தை தலைகீழாக்கி இறுதியில் அதனையே விட்டுவிட்டார்கள். அல்லாஹ்வின் மீது
ஆணையாக இறைமறையை எதைக்கொண்டும் நான் பிசக செய்யமாட்டேன் என்றார்கள். எனவே
அம்முயற்சி கைவிடப்பட்டது.
ஸஹாபிகளின் காலம் முடிவுற்றதும் ஹதீத்களை தொகுப்பதற்கு மிக்க அவசியம்
ஏற்பட்டுவிட்டது.எனவே இதற்கு முதல் நடவடிக்கை எடுக்கிறார்கள் இரண்டாம் உமர்
என அழைக்கப்பட்ட ஹழ்ரத் உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) அவர்கள். மதீனாவின்
பொறுப்பாளராக இருந்த அப10பக்கர் இப்னு முஹம்மத் என்பவருக்கு அவர்கள் கடிதம்
எழுதி நபியவர்களின் ஹதீத்களை வழிமுறைகளை நீங்கள் பார்வையிட்டு அதை எழுகிக்
கொள்ளுங்கள். ஏனெனில் அறிஞர்கள் மரணிப்பதோடு அந்த ஞானம் அழிந்து விடுமோ என
நான் அஞ்சுகிறேன் என்று எழுதிவிட்டு இதைபோன்று உலகில் பல திசைகளுக்கும்
எழுதி அனுப்பினார்கள். அபூபக்கர் அவர்கள் தன் பணியை செய்து முடிக்கும்
முன்பே உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் மரணித்து விட்டார்கள்
என்றாலும் அவர்களின் முயற்சியின் பயனால் இப்னு ஷிஹாப் அஜ்ஜூஹ்ரி (ஹிஜ்ரி
124)அவர்கள் முதன் முதலில் ஹதீத்களை தொகுத்தார்கள். அதன்பின் இப்னு ஜூரைஜ்,
முஹம்மத் இப்னு இஸ்ஹாக் போன்றோர்கள் ஹதீத்களை தொகுத்தார்கள் பின்னர் ஹழ்ரத்
மாலிக் இமாம் அவர்கள் முஅத்தா எனும் அரிய கிரந்தத்தை தொகுத்தளித்தார்கள்.பின்
ஸிஹாஹ_ஸ்ஸித்தா எனும் ஆறு கிரந்தங்கள் தொகுக்கப்பட்டு அகிலத்திற்கு
அளிக்கப்பட்டது. இவ்வான்றோர்களின் அரிய செயல்களால் தான் அண்ணல் நபிகளாரின்
செயல்முறைகள் அகிலம் முழுவதும் பின்பற்றப்படுகின்றன. எனவே அந்த நன்மக்கள்
மீதும் நம்மீதும் அல்லாஹ் தன் நல்லருளைச் சொரிவானாக!
ஆமீன்.
|
|