| |
|
|
எல்லாப் புகழும் இறைக்கே!
-
தமிழ்நெஞ்சம் அமின்.
நிறை
கடல் மண்ணும் விண்ணும்
நீண்ட வானு லக மெல்லாம்
குறை வறக் கொடுத்தாய் இறையே
குறுகிலா உள்ளம் வாழி!
---
பொன்னும்
மணியும், புனிதக் கனியும்,
பொலியும் பொருளும், உலகில்
மின்னும் வைரத் துகளும், நல்ல
மேரு மலைகாண் பொருளும்,
பண்ணும் பாடற் கலையும், நாட்டிற்
பணி செய் உருவும்
இன்னும் எப்பொரு ளீந்த இறைக்கே
எல்லாப் புகழும் உரித்தாம்!
|
|