நலமாகவே... நாடு வந்தீரே... ஹாஜிமார்களே...


இயற்றியவர்: ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ்
பாடியவர்: ஹாஃபிழ் பி.எஸ்.அஹ்மத் ஸாலிஹ்

ஸலாத்துன்வதஸ்...... லீமுவ்வஅஸ்........
காதஹிய்யதீ....... யாரஸூலல்லாஹ்...
அலல் முஸ்தஃபல்... ஹாதில்பரா...
யாமுஹம்மதீ... யாரஸூலல்லாஹ்!

நபிய்யல் ஹுதா லா தன்ஸானீ மின் ஷஃபாஅதிக் யாரஸூலுல்லாஹ்!
நபிய்யல் ஹுதா லா தன்ஸானீ மின் ஷஃபாஅதிக் யாரஸூலுல்லாஹ்!

நாயனருளால்... நலமாகவே...
நாடு வந்தீரே... ஹாஜிமார்களே...                                  (2)

நாங்களுங்களை... நாவினிக்கவே...
நாடியழைத்தோம்... ஹாஜிமார்களே...       - ஸலாத்துன்வதஸ்...

காணக்கண்கள்தான்... கோடி வேண்டுமே...
காணக்காணவே ஆசை ஊறுமே...                                 (2)

ஞானம் படைத்தோனி னில்லம் கஃபா...
நாளும் கண்டீரே... ஹாஜிமார்களே...       - ஸலாத்துன்வதஸ்...

ஏகனிடத்தில் சரணடைந்திடும்...
இன்ப தல்பிய்யா முழங்கினீர்களே...                               (2)

தேகப்பிணிகள் தீர்க்கும் ஜம்ஜமை...
தேனாய்க்குடித்தீர் ஹாஜிமார்களே...       - ஸலாத்துன்வதஸ்...

நேய நபியின் தூய பள்ளியாம்...
நபவீதனில் தொழுதிட்டீர்களே...                                    (2)

தூய நபியார் திரு ரவ்ழா...
தேட்டமாய்க் கண்டீர் ஹாஜிமார்களே...     - ஸலாத்துன்வதஸ்...

பாவப்பிழைகள்... பொறுக்கப்பட்ட...
பாலகர்களாய்... மாறினீர்களே...                                    (2)

பாவம் செய்திடா... வாழ்வமைந்திட...
பாடுபடுவீர்... ஹாஜிமார்களே...           - ஸலாத்துன்வதஸ்...

அன்பின் சோதரி ஃபாத்திமா ஜாஹிரா
ஆர்வமுடனே ஹஜ்ஜுக்கடனை..                                   (2)

இன்பம் பொங்கவே இனிது முடித்தே...
எம்மைச் ஏகினீர்... எம் ஹாஜிமார்களே...    - ஸலாத்துன்வதஸ்...

எல்லையில்லோனே... எங்கள் நாயனே...
உன்த னருளால்... எம் ஹாஜிமார்களின்...                       (2)

நல்ல ஹஜ்ஜையும்... உம்றா...தனையும்...
நாட்டமுடனே... ஏற்றருள்வாயே...          - ஸலாத்துன்வதஸ்...

அன்பு மேவவே... ஹாஜிமார்களே...
இன்பமாய்ப் பாடும்... எளியோன் ஸாலிஹின்...               (2)

துன்பம் நீங்கவும்... இன்பம் ஓங்கவும்...
துதிப்பீர்களே... எம் ஹாஜிமார்களே...      - ஸலாத்துன்வதஸ்...

 

Top