மண்ணிலே பிறந்ததேனோ எங்கள் பெருமானே


இயற்றியவர்:?
பாடியவர்: நாகூர் E.M.ஹனீஃபா

 

மண்ணிலே  பிறந்ததேனோ எங்கள் பெருமானே…
மாநிலத்தை  தாங்கிடவோ  எங்கள் பெருமானே  (2)
கண்ணியத்தின்  இருப்பிடமே  எங்கள் பெருமானே
காசிம்  முஸ்தபா நபியே எங்கள் பெருமானே
                                                                              (மண்ணிலே)
ஏந்தலராய் தானிருந்தும் எங்கள் பெருமானே…
ஏழையாக  வாழ்ந்ததேனோ எங்கள் பெருமானே  (2)
மாந்தருக்குள் மாணிக்கமே எங்கள் பெருமானே
மண் புழுதியில் வாழ்ந்ததேனோ  எங்கள் பெருமானே
                                                                              (மண்ணிலே)
மக்காநகர்  மாந்தரெல்லாம் எங்கள் பெருமானே…
மதியாமல்  விரட்டினரே எங்கள்  பெருமானே  (2)
தக்க துணை  பக்கருடன் எங்கள்  பெருமானே
தானடைந்தீர்  மாமதினா எங்கள்  பெருமானே
                                                                              (மண்ணிலே)
பஞ்சணையில்  தூங்கவில்லை எங்கள் பெருமானே…
போர் முனையில் பாடுபட்டீர் எங்கள் பெருமானே  (2)
சஞ்சலங்கள் தாங்கி நின்றீர் எங்கள் பெருமானே
சன்மார்க்கம் வாழ்வதற்கோ எங்கள்   பெருமானே
                                                                              (மண்ணிலே)
துப்புறவு  மேனியிலே எங்கள் பெருமானே…
துஷ்டர்களும்  வேண்டுமென்றே  எங்கள் பெருமானே  (2)
குப்பைகளை  கொட்டினரே எங்கள் பெருமானே
கொஞ்சமும்  சினங்கவில்லை  எங்கள் பெருமானே
                                                                              (மண்ணிலே)
பல்லுடைந்த நேரத்திலும் எங்கள்  பெருமானே…
பின் வாங்கி ஓடவில்லை எங்கள்  பெருமானே  (2)
கல்லடிகள் பட்டப்போதும்  எங்கள் பெருமானே
கயவர்களை சபிக்கவில்லை  எங்கள் பெருமானே
                                                                              (மண்ணிலே)

Top