ஏழையாக வாழ்ந்த தேனோ யா ரசூலல்லாஹ்...
நாளை மஹ்ஷர் வேலை உதவும் யா ஹபீபல்லாஹ்...
ஏழையாக வாழ்ந்த தேனோ யா ரசூலல்லாஹ்...
நாளை மஹ்ஷர் வேலை உதவும் யா ஹபீபல்லாஹ்...
ஏந்தலராய் தானிருந்தும் - ஏற்றமான வாழ்விருந்தும்
ஏந்தலராய் தானிருந்தும் - ஏற்றமான வாழ்விருந்தும்
யா ஹபீபல்லாஹ்
ஏழையாக...
எல்லாம் வல்ல இறைவன் தூதே எம்மான் முஸ்தஃபாவே...
நல்லோர் போற்றும் நபிகட் கரசே நாதர் முஸ்தஃபாவே...
தொல்லை துன்பம் சூழ்ந்த போதும் - தூய வெற்றி கண்டீர் நாளும்
தொல்லை துன்பம் சூழ்ந்த போதும் - தூய வெற்றி கண்டீர் நாளும்
தூதர் முஸ்தஃபாவே
ஏழையாக...
அல்லாஹ்வின் அருமை நபியே அண்ணல் முஸ்தஃபாவே...
அல்லல்களை வாழ்வாய் கொண்ட அஹ்மது முஸ்தஃபாவே...
அடி வயிற்றில் கல்லைக் கட்டி - அற்புதமாய் பசியை மறைத்தீர்
அடி வயிற்றில் கல்லைக் கட்டி - அற்புதமாய் பசியை மறைத்தீர்
ஆற்றல் முஸ்தஃபாவே
ஏழையாக...
தீனோரின் திருவின் திருவே தீனின் முஸ்தஃபாவே...
வானோர்கள் வாழ்த்தும் வனத்தே வள்ளல் முஸ்தஃபாவே...
ஏனோ வாழ்வில் இன்னல் கண்டீர் - ஏகனருள் ஏற்றுக் கொண்டீர்
ஏனோ வாழ்வில் இன்னல் கண்டீர் - ஏகனருள் ஏற்றுக் கொண்டீர்
ஏந்தல் முஸ்தஃபாவே