|
யா அல்லாஹ்.. யா ரஹீம்... என்றுசொல்
இயற்றியவர்:?
பாடியவர்: நாகூர் E.M.ஹனீஃபா
|
யா அல்லாஹ்.. யா ரஹீம்... என்றுசொல்
வான்மறை கூறிடும் வழிசெல்
என்றும் மறவாமல் இறையை போற்றிக்கொள்
நெஞ்சே ஈமானுடன் நிமிர்ந்து நில் (2)
இத்தரை வானம் படைத்தவன் அவனே..
ஏற்றமுடன் வாழ்வு கொடுத்தவன் அவனே..
உத்தம நபியை தந்தவன் அவனே..
நித்தமும் ரஹ்மானை புகழ்ந்திடுவாயே.. (2)
மாண்புறு மண்ணால் நம்மை படைத்தானே..
மகிமையுடன் அறிவு திறன் கொடுத்தானே..
மேன்மையுடன் ஆற்றல் யாவும் தந்தானே..
மேலோன் ரஹ்மானை புகழ்ந்திடுவாயே.. (2)
உன்னத சொர்க்கத்தை படைத்தவன் அவனே..
ஓங்கிடும் இஸ்லாம் தந்தவன் அவனே..
உண்மை குர்ஆனை கொடுத்தவன் அவனே..
உகப்புடன் ரஹ்மானை புகழ்ந்திடுவாயே.. (2)
நேர்வழி காட்ட மார்க்கம் தந்தானே..
நெறியுடன் வாழ வழி வகுத்தானே..
பேர்பெரும் உரைகள் பலவும் தந்தானே..
பெரியோன் ரஹ்மானை புகழ்ந்திடுவாயே.. (2)
உள்ளம் கனிந்து தொழுதிடுவாயே..
உன்பாவம் போகவே அழுதிடுவாயே..
வள்ளல் மனத்தாலே வாரி வழங்கும்
வாய்மை ரஹ்மானை புகழ்ந்திடுவாயே..(2)
|