இருலோகம் போற்றும் இறை தூதராம்...
இஸ்லாத்தை தந்த நபி நாதராம்...
அருள் வடிவானவர் அண்ணல் மஹ்மூதர்...
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்... (2)
இருலோகம் …
இத்தரை வானம் படைத்தகோடி கோடி இன்பம்...
எங்கள் கோமான் நபி சென்ற வழியில்...
பாடி பாடி மகிழ்வோம்...
எங்கள் பயகம்பர் பகர்ந்த பொன் மொழியில்...
இன்னும் சொல்லவா அவர் பெருமை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹ்மூதர்...
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்... (2)
இருலோகம் …
ஆதி இறை தந்த வடிவம்...
அன்னை ஆமினார் ஈன்றெடுத்த செல்வம்...
நீதி நிலை நாட்டி என்றும்...
நம்மை நெறியோடு வாழவைத்த நெஞ்சம்...
இன்னும் சொல்லவா அவர் மகிமை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹ்மூதர்...
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்... (2)
இருலோகம் …
வானமும் வையமும் போற்றும்...
நல்ல வழி காட்டும் உயர் மார்க்கம் தந்தார்...
தீன் மழை பெய்திட எங்கும்...
நபி திருவேத மறையளித்துச் சென்றார்...
இன்னும் சொல்லவா அவர் புகழை...
அருள் வடிவானவர் அண்ணல் மஹ்மூதர்...
இருள் நீக்க வந்தவர் எங்கள் நபிநாதர்...(2)