| |
|
|

(ஷாஃபி மத்ஹபின் சட்டநூல்)
ஷாஃபி
மத்ஹபின் சட்டநூற்களில் ஒன்று ஃபத்ஹல்முயீன் என்ற அரபுகிரந்தம். ஊலகின் பல
பகுதிகளில் உள்ள மத்ரஸாக்களில் இதுபாடத்திட்டமாகவும் உள்ளது.இதனை
இந்தியாவில் கேரளா பொன்னானி எனும் ஊரில் பிறந்த அஷ்ஷெய்க் ஸைனுத்தீன்
இப்னுஅப்துல் அஸீஸ் எனும் சட்டவல்லுனர் எழுதியுள்ளார்கள்.இவர்கள் அஷ்ஷெய்க்
இப்னு ஹஜருல் ஹைதமி அவர்களின் மாணவர் ஆவார்கள்.
இச்சிறப்யுயர் கிரந்தத்தை தமிழகத்தின் காயல்பட்டணத்தைச் சேர்ந்த அல்லாமா
அஹ்மதுமுஹ்யித்தீன் ஆலிம் அவர்கள் அரபுத்தமிழில் மொழிபெயர்த்துள்ளார்கள்.
இவர்கள் மக்களால் செல்லமாகவும் மரியாதையாகவும் 'செண்டுஆலிம்"
என்றழைக்கப்பட்டார்கள். இக்கிரந்தம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு
அதன்முதல் பகுதி தமிழ்நாடு காயல்பட்டினம் 'மஹ்ழரி" அவர்களால்
அடிக்குறிப்புகளோடு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. இம்முதல் பகுதியில் வுழு,குளிப்பு,மாதவிடாய்,மல
ஜல உபாதைகளை சுத்தம் செய்வது தொழுகையின் பர்ளு,சுன்னத்,ஷர்த்து,மற்றும்
சுன்னத்தான தொழுகைகள் பற்றிய விபரங்கள்அடங்கியுள்ளன.
இதன் இரண்டாம் பகுதி 2007 ஆகஸ்ட் 16ம் நாள்
காயல்பட்டினத்தில் வெளியிடப்பட்டு விற்பனையிலுள்ளது.
இந்நூலின் நான்கு பகுதிகளையும் வெளியிடும் பொறுப்பை சென்னையில் அங்கப்பன்
தெரு K.A.S.ஜெய்னுல் ஆபீதீன் நிறுவனத்தினர் ஏற்றுள்ளனர்.
இந்நூல் கிடைக்குமிடங்கள ்:
Muaskarur Rahman Women's Arabic College
138, Cholukkar Street, Kayalpattinam. India.
K.A.S. Zainul Abdin & Co
88, Angappan Street, Chennai 600 001. India.
VETTRI
25, Forbes Lane, Mardana, Colombo 10. Sri-Lanka
Association de
Sunnath-val-jamath d'Islam
France
|
|