பர்தா ஒரு பாதுகாப்பு கவசம்


எந்த ஒரு பொருளும் மறைத்து வைக்கப்படும் போது தான் அதன் மதிப்பு பாதுகாக்கப்படும். முன்னால் கிடக்கும் பொருள் பெரும் பாலும் சாதாரணமானதாக தெரியும். உயர்ந்த பொருள் மறைக்காமல் வெளியில் தெரிந்தால் களவாடப்பட்டு விடும் என்பதும் அறியாதspan> தல்ல.  

பெண்கள் இரு கண்களைப் போன்றவர்கள். கண்களுக்கு அல்லாஹ் இமைகளை பாதுகாப்பாக அளித்தான். பெண்களுக்கு ஃபர்தாவை பாதுகாப்பாக அறிவித்தான். குர்ஆனிலுள்ள ஆயத்துல் ஹிஜாபின் மூலம், பெண்கள் விலை மதிக்க முடியாதவர்கள். அவர்களின் கற்புக்கு மட்டுமல்ல. கௌரவத்திற்கும் காப்புரிமை வேண்டும் என்பது இறைவனின் ஆவல்.  

ஓரு பெண் ஃபர்தா அணிந்துக் கொள்ளும் போது நல்ல பாதுகாப்பை பெறுகிறாள். கண்ணியம் நிறைந்தவளாக சமுதாயம் அவர்களை பார்க்கிறது. பண்புடனும் பணிவுடனும் அணுகுகிறது. 

ஃபர்தா அணியாத பெண் பலருடைய பார்வை மேயும் இடமாகிறாள். புருஷனுடனும் தந்தையுடனும் நடந்து செல்லும் இளம் பெண்ணும் காமக் கண்களிலிருந்து தப்புவதில்லை. விடலைகளின் விஷமப் பேச்சிலிருந்து விலக முடிவதில்லை.  

ஒரு பெண் வெளியில் நடந்து செல்லும் போது ஆடவர் பார்வையில் அவளுடைய ஒவ்வொரு அங்கத்தையும் ஷைத்தான் அழகாக காட்டுகிறான். நடை, உடை, பாவனை எல்லாவற்றையும் ரசிக்கச் செய்கிறான். ஓரு பேரூந்தில் இரயிலில் ஒரு இளம் பெண் ஏறும் போது அத்தனை பேர் பார்வையும் அவளை நோக்கி திரும்புகிறது. ஓர் இளம் பெண்ணை நாம் பார்க்கலாமா? நமது வீட்டு பெண்ணை ஒருவர் திரும்பிப் பார்ப்பதை நாம் விரும்புவோமா? சகிப்போமா? நாம் ஒரு பெண்ணை பார்ப்பதை பிறர் பார்க்கிறார்களே! வெட்கம் வேண்டாமா? என்று பொது ஜனங்களில் பலர் எண்ணுவதில்லை. கவலைக் கொள்ளுவதுமில்லை. 

ஒரு பெண் ஃபர்தா அணிந்து தோன்றும் போது மக்கள் கவனத்தை அவள் ஈர்ப்பதில்லை. காமுகர்களின் கண்களில் சிக்குவதில்லை. அழகிய அவயங்கள் பார்க்கப்படுவதில்லை. ஈனத்தனமான இளைஞர்களின் இளக்கார பேச்சுக்கும் இளக்காவதில்லை. கண்ணியத்துடனும் கவுரவத்துடனும் வெளியில் சென்று வீடு திரும்புகிறாள். இப்படி பெண்ணுக்குரிய மரியாதை போற்றப்பட வேண்டும் என்பது தான் இறைவனின் திட்டம். இறைத் து}தரின் அறிவுரை. வல்ல அல்லாஹ் மானிடனுக்கு ஒன்றை ஹலாலாக்கினால் அல்லது கடமையாக்கினால் அதில் நன்மை இருக்கும். ஹராமாக்கினால் அதில் முழுக்க தீமையே இருக்கும். அதனடிப்படையில் தான் அல்லாஹ் ஃபர்தாவை கடமையாக்கினான். ஃபர்தாவை பேணுவதில் முஸ்லிம் பெண்களுக்கு நிறைந்த நன்மைகள் உள்ளன. இஸ்லாமிய பெண்மணிகள் இறைக் கட்டளையை காப்பாற்ற முன்வர வேண்டும். 

ஃபர்தா அணிந்தவர்கள் தான் பரிசுத்த பெண்கள். ஃபர்தா அணியாதோர் உத்தமிகள் இல்லையா? என்ற கேள்வி வேண்டாததாகும். ஓரு பெண்ணை நல்லவள் அல்லது கெட்டவள் என்பதை எடை போடுவதற்காக இந்த  ஃபர்தா கடமையாக்கப்பட வில்லை என்பதை முதலில் நாம் விளங்கிட வேண்டும். நல்லவளாக இருப்பவள் ஃபர்தா அணிந்திருப்பாள். கெட்டவளாக இருப்பவள் ஃபர்தா அணியாதிருப்பாள் என்று நம்முடைய மார்க்கம் இனம் பிரிக்க வில்லை. மட்டம் தட்டவுமில்லை.

மாறாக அன்னிய ஆடவர்களால் பெண்களின் மரியாதைக்கு எந்த கலங்கமும் கண்ணியக் குறைவும் ஏற்படக் கூடாது என்பதே ஃபர்தா சட்டமாக்கப்பட்டதின் நோக்கம். எனவே நல்லோர்களிடத்தில் இறைச் சட்டங்களை எடுத்துச் சொன்னால் செவியேற்றோம். பணிந்தோம் என்று உரைப்பார்கள் என திருமறை கூறுகிறது. அதனடிப்படையில் இஸ்லாமிய பெண்கள் ஃபர்தா என்ற இறைச் சட்டத்தை ஏற்று நடக்க வேண்டும். 

அண்ணல் நபி அவர்கள் காலத்தில் ஹிஜாப் ஃபர்தா சட்டம் இறங்கியதும் அன்ஸாரிப் பெண்கள் ஏன் எதற்கு என்ற கேள்வியை எழுப்பவில்லை. கொடியில் கிடந்த முந்தானைகளை எடுத்து முதற்கண் தமது நெஞ்சுப் பகுதியை மறைத்து கட்டளைக்கு கீழ் பணிந்தார்கள் என்பது வரலாறு.  

நிச்சயமாக அல்லாஹ் உங்களின் மேனிகளையோ தோற்றங்களையோ பார்ப்பதில்லை. உங்களின் எண்ணங்களையும் செயல்பாடுகளையும் தான் கவனிக்கிறான் என்ற நாயகத்தின் வாக்கை சிலர் கையில் எடுத்துக் கொண்டு எனவே எங்களின் இதயங்கள் பரிசுத்தமாக உள்ளது. எங்களின் தோற்றங்களைத் தான் இறைவன் பார்ப்பதில்லையே. எனவே நாங்கள் ஃபர்தா அணிவதில்லை. அல்லது ஃபர்தா என்ற பெயரிலே மெல்லிய துப்பட்டி அணிகிறோம் என சிலர் தர்க்கம் பண்ணுகின்றனர்.  

தோற்றம் நன்றாக இருந்தால் மட்டும் போதாது. உள்ளமும் து}ய்மையாக இருக்க வேண்டுமென்பதே இந்த ஹதீதின் கருத்து என்பதை முதலில் விளங்கிட வேண்டும். நம்முடைய புறத் தோற்றமும் இலட்சணமாக இருக்க வேண்டுமென்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு. பங்கரைத் தோற்றத்துடன் முன்தோன்றிய ஒரு நண்பரை நபிகளார் கடிந்துரைத்தார்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அழகையே விரும்புகின்றான் என்றும் பகர்ந்தார்கள். பள்ளிக்கு வரும் போது ஜீனத் அழகிய தோற்றத்துடன் வாருங்கள் என்று அல்லாஹ் அறிவித்துள்ளான். இது போன்று அறிவுரைகள்  நிறைவாக உள்ளன. 

அதே சமயம் புறத் தோற்றம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது. அகமும் அழகாக இருக்க வேண்டும் என்பதே மேற்கண்ட ஹதீதின் கருத்து. ஒருவர் உள்ளத்தால் மாசுபட்டிருந்து கள்ளத்தனமாக இருந்துக் கொண்டு உடலை மட்டும் கவர்ச்சியூட்டிக் கொண்டிருந்தால் அசிங்கமான மலத்தை அழகிய பட்டாடைக் கொண்டு மறைப்பது போன்று தான் ஆகும். 

எனவே நம்முடைய மனமும் து}ய்மையாக இருக்க வேண்டும். தோற்றமும் ஏற்றமாக இருக்க வேண்டும். இஸ்லாமிய பெண்களுக்கு ஏற்றமான மான கவசமாகத்தான் ஃபர்தாவை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முகலாய படையெடுப்புக்கு பின்னர் தான் இந்தியாவின் பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள ஃபர்தா அணியும் பழக்கம் நடைமுறைக்கு வந்தது. காலம் மாறிவிட்டால் காலத்திற்கு ஏற்ப நாமும் மாற வேண்டும் என காங்கிரஸ் கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திருவாய் மலர்ந்துள்ளார். வரலாறு தெரியாமல் இப்படி அந்த அம்மை பேசியிருக்கக் கூடாது. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என மற்றவர் பேசுவது போல ஒரு மேலிட பெண்மணி பேசுவது மிகவும் வேதனைக்குரியது. 

ஆயிரத்து நானு}று ஆண்டுகளுக்கு முன்பே ஃபர்தா பற்றிய வசனத்தை அல்லாஹ் இறக்கிவிட்டான். நபியே! உமது துணைவியாரிடமும் பெண் மக்கள் ஏனைய முஃமீன்களின் பெண்களிடம் அவர்கள் தங்களின் மேலாடைகளை நெருக்கிக் கொள்ளட்டும் என்று கூறிவிடுங்கள். அவர்கள் யார் என்பதை அறிந்துக் கொண்டு அவர்களை வேதனைப் படுத்தப்படாதிருக்க அதுவே மிக நெருக்கமானதாகும். அல்லாஹ் சிறந்த மன்னிப்பாளனும் கருணை மிக்கவனுமாகி விட்டான் . 33 : 59. 

இதில் முகலாய படையெடுப்புக்கு முன் பின் என்ற பேச்சுக்கு என்ன அவசியம் இருக்கிறது. காலத்திற்கேற்ப மாறுவது என்றால் இன்றைய கலையுலக காலம் மிகவும் கெட்டுப் போய் உள்ளது என்கிறார்கள். ஆண்களும் பெண்களும் அவர்களில் பலர் கண்ணியமற்றிருக்கிறார்கள் என்பது பரவலான ஆதங்கம். காலத்திற்கேற்ப மாறுவது என்று ஜனாதிபதி வேட்பாளர் கூறுகிறார் என்றால் இன்றைய அவலமான கால சூழ்நிலைக் கேற்ப மாறிக் கொள்ளலாம் என்று கூறுகிறாரா? என்பதை அவரும் அவரை முன்னிறுத்தும் கட்சிகளும் தெளிவுபடுத்த வேண்டும். 

பெண்களுக்கு இஸ்லாம் பல்வேறு மரியாதைகளை தந்துள்ளது. பெண்களுக்கு நீங்கள் நல்ல வாழ்வைத் தாருங்கள் என்ற வல்ல அல்லாஹ் இறைமறையில் கட்டளையிட்டுள்ளான். பெண்களுக்கு சொத்துரிமை, பேச்சுரிமை மறு விவாக உரிமை போன்ற பல்வேறு உரிமைகளை இஸ்லாம் அறிமுகப்படுத்தியுள்ளது. நபியின் காலத்திற்கு முன் பெண்களுக்கு பேச்சுரிமை மறுக்கப்பட்டு வந்தது. பெண்கள் தங்கள் கணவன்களிடம் தங்களுக்கு தேவையான உரிமைகளை கேட்டுப் பெற்றுக்கொள்ள நபிகள் நாயகம் அவர்கள் அனுமதி தந்துள்ளார்கள். அண்ணலாரிடம் அவர்களுடைய அன்புத் துணைவியர் சுதந்திரமாக பேசிக் கொள்ளும் வாய்ப்பை தந்தார்கள். மஸ்ஜிதுன் னபவியில் ஒரு பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த வீர விளையாட்டைக் காண இறைத் து}தரின் இல்லத்தரசி அன்னை ஆயிஷா வேண்டிய போது தாங்களே அதற்கான ஏற்பாட்டை நபிகள் நாயகம் அவர்கள் செய்து கொடுத்தார்கள். 

இப்படியே நாம் சொல்லிக் கொண்டே போகலாம். இன்னும் சொல்லப் போனால் ஆண்களுக்குள்ள பொறுப்பு சுமைகளை பெண்களுக்கு இஸ்லாம் சுமத்த வில்லை. ஒரு பெண் திருமணம் முடிக்கு முன் தன் பெற்றோர் பொறுப்பில் இருக்கிறாள். முணமுடித்தப் பின் கணவன் பொறுப்பில் குடும்பத்திற்கு சம்பாதித்து போடும் கடமை நிச்சயம் இஸ்லாமிய பெண்களுக்கு இல்லை. ஆண்களுக்கே உள்ளது என்பது இறைமறை போதனை. 

இப்படியெல்லாம் பல்வேறு மரியாதைகளை பெண்களுக்கு வாரி வழங்கியுள்ள இஸ்லாம் தான் அவர்கள் ஃபர்தா முறையை கையாள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளது. அதன் நோக்கமும் பெண்களின் கண்ணியத்தை காப்பாற்ற வேண்டும் என்பது தான். அல்லாஹ் நமக்கு புரிந்துணர்வை தந்தருள்வானாக! ஆமீன்.

 

Top