இறையில்லம்
திருக்கஃபா
ان اول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات
مقام ابراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع
اليه سبيلا
நிச்சயமாக இவ்வையகத்தில் அல்லாஹ்வை வணங்குவதற்காக மனிதர்களுக்கென
அமைக்கப்பட்ட முதல்;
ஆலயம்
பக்கா எனும்;
மக்காவில் உள்ள (கஃபா) தான்.. அது மிக்க பாக்;கிய
முள்ளதாகவும் உலகத்தோருக்கு நேரான வழியை அறிவிக்கக் கூடியதாகவும்
இருக்கிறது. அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. அவற்றில் பிரதானமாக நபி
இபுறாஹீம் (அலை) அவர்கள் நின்ற இடமும் உள்ளது. எவர் அப்;புனித
ஆலயத்திற்குள் நுழைகிறாறோ அவர் பாதுகாப்பு பெற்றவராகி விடுகிறார். எனவே
யார் அங்கு பிரயாணம் செய்ய முடியுமோ அத்தகையவர் மீது அல்லாஹ்விற்காக
அந்த ஆலயத்தை ஹஜ்ஜூ செய்வது கடமையாகும்.
இத்து}ய
வசனம் உலகில் நிர்மாணிக்கப்பட்ட இறையில்லங்களில் முதன்மையானது புனித
கஃபா தான் என சுட்டுகிறது. இத்;தகைய
புனித கஃபா ஹழ்ரத் இபுறாஹீம் நபி (அலை) அவர்களோடு மிகுந்த
தொடர்புடையதாக இருப்பினும் அவர்களுக்கு முன்பாகவே இவ்வாலயம்
உருவாக்கப்பட்டுவிட்டது என்பதனை திருமறைக்கான பல விரிவுரைகள்
எடுத்தியம்புகிறது.
முதலாவதாக : நபி ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டதற்கு முன்பாக சங்கை
மிகு வானவர்கள் இக்கஃபாவை சிவப்பு மரகதத்தால் கட்டினார்கள். அதன்பின்
ஹழ்ரத் நு}ஹ்
நபி (அலை) அவர்கள் காலத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது அது
வானுக்கு உயர்த்தப்பட்டு விட்டது..
இரண்டாவதாக : ஹழ்ரத் இபுறாஹீம் நபி (அலை) அவர்கள் கட்டினார்கள். இது
குறித்து வரலாறு இயம்பும் போது : நபி இபுறாஹீம் (அலை) அவர்களை கஃபாவை
கட்டுமாறு அல்லாஹ் ஏவினான். அப்போது எவ்விடத்தில் கட்டுவது என்பதனை
அவர்கள் அறியாததினால் இறைவன் கஜுஜ்;
என்ற ஒரு
காற்றை அனுப்பினான். அக்காற்று கஃபாவைச் சுற்றியுள்ள பகுதியை
பெருக்கியது. கஃபா இருந்த பகுதியை தெளிவுபடுத்தியது.
இன்னொரு
தகவலின் பிரகாரம் வல்ல அல்லாஹ் கஃபாவின் அளவிற்கு ஒரு மேகத்தை
அனுப்பினான். அது கஃபா இருந்த பகுதிக்கு நேராக மேலே வந்து நின்றுக்
கொண்டது. அதற்கு கீழாக நபி இபுறாஹீம் (அலை) அவர்கள் கட்டினார்கள்.
அம்மேகத்திற்கு தலையும் இருந்தது. அது நபியை பேராக்கி இபுறாஹீம் நபி
அவர்களே! எனக்கு நேராக கஃபாவை எழுப்புங்கள் என்றது. அந்த அடிப்படையில்
அவர்கள் கட்டினார்கள். (அவர்களுக்கு உதவியாக அவர்களின் திருமகனார்
ஸெய்யிதுனா ஹழ்ரத் இஸ்மாயீல் (அலை) அவர்கள் இருந்தார்கள்.
மூன்றாவதாக : நபிகள் வாலிப பருவ காலத்தில் குறைஷிகள் கட்டினார்கள்.
நபிகளும் புனித கஃபாவை கட்டுவதற்கு பங்கு பெற்றார்கள். கஃபா கட்டி
முடிக்கப்பட்ட பின்பு ஹஜருல் அஸ்வத் கல்லை அதற்குரிய இடத்தில் வைக்கும்
விஷயத்தில் குறைஷிகளுக்கு மத்தியி;ல்
பிணக்கு ஏற்பட்டது. ஒவ்வொரு குடும்பத்தாரைச் சார்ந்த தலைவர்களும் தாமே
அதனை உரிய இடத்தில் வைக்க வேண்டும் என்று கருதினர். எப்படி வைப்பது
என்பதனை அவர்கள் பெருமையாகவும் தங்கள் குடும்பத்திற்கு கிடைத்த
பாக்கியமாகவும் கருதினர். எனவே அப்பெருமையை இழக்க விரும்பாத
அத்தலைவர்களுக்கு மத்தியில் போட்டியும் பிணக்கமும் ஏற்பட்டு அது ஒரு
பெரும் யுத்தமாக மாறும் அபாயம் ஏற்பட்டது. அச்சமயம் அங்கிருந்த ஒரு
மூத்தவர்... குறைஷிகளே! உங்களுக்குள் சண்டையிட்டு உங்களை நீங்கள்
அழித்துக் கொள்ளாதீர்கள். நாளை விடிகாலை இப்பகுதியில் முதலாவதாக யார்
நுழைகிறாறோ அவரை நீதியாளராக ஏற்று அவர் கூற்று படி நடவுங்கள் என்றனர்.
இவ்வாலோசனை அவர்களுக்கு மிகச் சரியாக பட்டதால் அதனை ஏற்றுக் கொண்டு
கலைந்து சென்றது. மறுநாள் விடியுமுன்பே கஃபா வந்து ஒன்று கூடி
காத்திருந்தார்கள். அப்போது அக்குறிப்பிட்ட வழியில் வந்தது நபிகள்
பூமான் கண்மணி நாயகம் அவர்களே!
நபிகளின்
கண்ணியத்;தையும்
புனிதத்தையும் அறிந்த குறைஷிகள் மிக்க சந்தோஷித்தவர்களாக அவர்களிடம்
விஷயத்தை எடுத்துச் சொல்லி இவ்விஷயத்தில் நபிகள் சொல்வதற்கு
கட்டுப்படுவதாக வாக்களித்தார்கள். அறிவுசால் கண்மணி நபிகளும் தனது
மேலங்கியை எடுத்து கீழே விரித்து அதில் அக்கல்லை வைத்து எல்லோரையும்
சேர்த்து அத்துணியில் பலபகுதிகளையும் பிடித்துக் கொண்டு து}க்கச்
சொன்னார்கள். அவர்களும் அவ்வாறு உயரத் து}க்க
உரிய இடத்தில் நபிகள் அதனை தங்கள் திருக்கரத்தால் பொறுத்தினார்கள்.
இதனால் குறைஷிகளுக்கு மத்தியில் ஏற்பட இருந்த பெரும் கலகம்
நீக்கப்பட்டது. இச்சமயத்தில் தான் கண்மணி நபிகளை குறைஷிகள் அல்அமீன்
என்று அழைத்தார்கள்.
நான்காவதாக : ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் (ரழி) அவர்களின் திருமகளார்
ஸெய்யிததுனா அஸ்மா (ரழி) அவர்களின் மகனார் ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு
ஜுபைர் (ரழி) அவர்கள் மக்காவின் பொறுப்பில் இருந்த போது கட்டினார்கள்.
ஐந்தாவது
: நான்காவதாக கட்டி முடிக்கப்பட்ட சில காலத்திலேயே ஹஜ்ஜாஜ் இப்னு
யூசுஃப் கட்டினார்.
இதன்றி
சிறிய சிறிய அளவில் அப்புனித ஆலயத்தில் அவ்வப்போது சீர்பார்க்கப்பட்ட
செய்திகளும் உண்டு.
சிறந்த
கஃபா : புனித கஃபாவின் எண்ணிக்கை மொத்தம்
15
என்றும் ஏழு வானங்களில் ஏழு கஃபாக்களும் பூமிக்கு அடியில் ஏழு
கஃபாக்களும் பூமிக்கு மேலால் நான் காணும் இந்த கஃபாவும் உள்ளது.
ஒவ்வொன்றும் மிகச் சரியாக துல்லியமாக நேர் கோட்டில்
அமைக்கப்பட்டுள்ளது. ஒரு கஃபா இடிந்து விழுந்தால் அது மற்ற கஃபாவின்
மீது தான் விழும் எனும் அளவிற்கு நேருக்கு நேராக அமைக்கப்பட்டுள்ளது.
நாம்
காணும் இப்புனித கஃபாவிற்கு பணிவிடை செய்வதற்காக பணியாளர்கள் இருப்பது
போன்று மற்ற பதினான்கு கஃபாக்களுக்கும் பணியாளர்கள் உண்டு. எனினும்
அனைத்து கஃபாக்களாலும் நானும் காணும் மக்காவிலுள்ள கஃபாவே மிகச்
சிறந்ததும் மேன்மையானதுமாகும்.
ஹஜ்ஜூக்கு அழைப்பு : இபுறாஹீம் நபியை நோக்கி ஹஜ்ஜுக்கு அழைப்பு
விடுங்கள் என்றான். மக்கள் கால் நடையாகவும் உங்களிடத்தில் வருவார்கள்.
வெகுது}ரத்திலிருந்து
மெலிந்த ஒட்டகங்களின் மீதமர்ந்தும் வருவார்கள் என்றான் அல்லாஹ்.
மகனார்
நபி இஸ்மாயீல் (அலை) அவர்கள் உதவிட ஸெய்யிதுனா கலீலுல்லாஹ் நபி
இபுறாஹீம் (அலை) அவர்கள் புனித கஃபாவை கட்டி முடித்தார்கள். ஹஜ்ஜிற்காக
மக்களை அழைக்குமாறு வல்ல அல்லாஹ் கட்டளையிட்டான். அச்சமயம் நபியவர்கள்
யாஅல்லாஹ்! நான் அழைத்து உலகம் முழவதிலும் வர்ழும் மக்களுக்கு எப்படி
விளங்கும் என்று கேட்ட போது அழைப்பது உங்கள் கடமை அதனை எத்திவைப்பது
எனது பொறுப்பு என்றான் வல்ல நாயன். அதன் பின் அபூகுபைஸ் மலையின் மீது
இன்னொரு கூற்றின் படி அவர்கள் ஏற்கனவே நின்று கஃபாவை கட்டிய கல்லின்
மீது ஏறி நின்று அழைத்தார்கள். அப்போது அக்கல் அழைப்பதற்கு வசதியாக மிக
உயரமாக மேலேறிச் சென்றது.
நபி
இபுறாஹீம் (அலை) அவர்கள் தங்களின் இரு விரல்களை இரு காதுகளுக்குள்
நுழைத்துக் கொண்டு வலப்பக்கமாகவும் இடப்பக்கமாகவும் கிழக்கு
மேற்காகவும் திரும்பி......
மக்களே!
அல்லாஹ் ஒரு வீட்டை கட்டியுள்ளான். அதனை நாடிவந்து (வணக்கம்) புரிவதை
உங்கள் மீது கடமையாக்கியுள்ளான். எனவே உங்கள் இறைவனுக்கு
பதிலளியுங்கள். அல்லாஹ் நரகத்திலிருந்து உங்களை காப்பாற்றி சுவனத்தில்
உங்களுக்கு கூலியாக வழங்குவான் வேண்டி ஹஜ்ஜை நிறைவேற்றுங்கள் என
அழைப்பு விடுத்தார்கள்.
இவ்வழைப்பை செவியேற்றே வானுக்கும் பூமிக்கும் இடைபட்டோர் லெப்பைக்
அல்லாஹ{ம்ம
லெப்பைக் (அல்லாஹ்வே! உனக்கே வழிபட்டோம்) என்றனர்.
முதலாவது
பதில் கூறியவர்கள் யமன் வாசிகள். இதனாலன்றோ யமன் வாசிகள் ஹஜ்ஜில் மிக
அதிகமாக பங்கு பெறுகின்றனர். இந்த யமன் வாசிகள் உள்ளவர்கள் தான் ஹழ்ரத்
உவைஸ{ல்
கர்னி (ரழி) அவர்கள்
ஹஜ்ஜு
வணக்கத்தின் நன்மை :
ஹஜ்ஜிற்காக ஒருவர் வாகனித்து வரும் போது அவ்வாகனத்தின் ஒவ்வொரு
எட்டிற்கும்
70
ஹஜ்ஜின் நன்மையும் நடந்து வருபவர்களின் ஒவ்வொரு எட்டிற்கும் ஹரமின்
நன்மைகள்
700
நன்மையும் வழங்கப்படும் என நபிகள் நாயகம் அவர்கள் கூறிய போது ஹரமின்
நன்மைகள் என்றால் என்று கூட்டம் வினவப்பட்டது. அதற்கு நபிகள் ஹரமின்
ஒரு நன்மை என்பது ஒரு லட்சமாகும் என்றார்கள்.
ஒரு
செய்தி :
ஒவ்வொரு
நிஸ்ஃபு ஷஃபான் (பராஅத்தின்) போதும் வல்ல அல்லாஹ் கஃபாவை உற்று
நோக்குகிறான். அச்சமயம் பல இதயங்கள் ஏங்க ஆரம்பிக்கின்றன. அவ்விதயங்கள்
இபுறாஹீம் நபி அவர்களின் அழைப்பிற்கு பதில் சொன்ன இதயங்களாகும்.
ஹழ்ரத்
அல் இமாமுல் அஃழம் அபூஹனீஃ;பா
(ரஹ்) அவர்கள் ஹஜ்ஜு செய்வதற்கு முன்பு வணக்க வழிபாடுகளுக்கிடையில்
ஏற்றத் தாழ்வு ஏற்பட்டுக் கொண்டிருக்கும் என்று கருதினார்கள். புனித
ஹஜ்ஜை மேற்கொண்ட பின் அதில் கண்ட அத்தாட்சிகளை முன்வைத்து எல்லா
வணக்கங்களை விட ஹஜ்ஜே மேன்மையானது என்றார்கள்.
ஓர்
அழைப்பு :
இறை
நேசர்களில் ஒரு ஞானி ஹஜ்ஜு செய்ய நாடினார். அவரின் இளைய மகனும் நானும்
உங்களோடு ஹஜ்ஜுக்கு வருவேன் என்றார். ஆனால் அந்த ஞானியோ தங்கள் மகனை
நோக்கி மகனே! உனக்கு மிக்க சின்ன வயது. இப்போது வேண்டாம் என்று மறுத்த
போது அச்சிறுவர் அடம் பிடித்து அழ துவங்கி விட்டார். ஒருவரின்
வீட்டுக்கு சென்றால் அவ்வீட்டுக்கு சொந்தக் காரரை காண முடியும் தானே!
அது போல பைதுல்லாஹ்விற்கு சென்றால் இறைவனை பார்க்கலாம் என்று
அச்சிறுவர் கருதினார்.
வேறு
வழியின்;றி
மகனையும் அழைத்துக் கொண்டு புனித கஃபாவிற்கு வந்த அந்த ஞானி புனித
கஃபாவைப் பார்த்த போது அதிர்ந்து போன அச்சிறுவர் அப்படியே கீழே
விழுந்து மரணித்து விட்டார். சட்டென்று காணாமலும் போய் விட்டார்.
திடுக்கிட்டு போன தந்தை என் பிள்ளை எங்கே?
எனது
ஈரக் குலை எங்கே என்று சப்தித்தார். அப்போது ஓர் அசாPரி
இப்படி முழங்கியது.
ஞானியே!
நீங்கள் கஃபாவை தரிசிக்க வந்தீர்கள். அதனைக் கண்டுக் கொண்டீர்கள்.
உங்கள் மகனோ கஃபாவின் ரப்பை காண வந்தவர்கள் அவர் அதனைப் பெற்றுக்
கொண்டார். இப்போது அவர் கப்ரிலும் இல்லை. பூமியின் எந்த பகுதியிலோ
சுவனத்திலோ கூட இல்லை. அவர்கள் தனது ரப்பின் உயர்ந்த தளமான மக்அத்
சித்கில் உள்ளார்.
புனித
கஃபாவின் சிறப்பை விளங்க இச்சிறிய நிகழ்வு போதுமானதே!
அல்ஹம்துலில்லாஹ்!