கலீலுல்லாஹ் நபி இப்ராஹீம்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்

எல்லாம் வல்ல அல்லாஹ் தான் யார் என்பதை நிரூபிக்க விரும்பி இவ்வுலகில் தன்னுடைய பிரதிநிதியை    படைக்க நாடினான் அதன் காரணமாக ஹஜ்ரத் ஆதம் நபிமுதல் பல நபிமார்களை படைத்தான். அத்தகைய நபிமார்களில் இபுராஹீம் நபியவர்களும் ஒருவர் ஆவார்கள். இவர்கள் நூஹ் நபியடைய காலத்திற்கு 1263 ஆண்டுக்கு பின் நூஹ் நபியின் குமாரர் ஸாமின் 5ம் தலைமுறையில் ஹவ்ரான் எனும் ஊரில் பிறந்தார்கள். அவர்கள் தகப்பன் பெயர் தாறஃ தாயார் பெயர் லயூதா. இவர்கள் வாழ்ந்த காலத்தில் நம்ரூத் என்ற பெயருடன் மிகவும் சக்தி மிகுந்த கொடுங்கோலன் வாழ்ந்து வந்தான் இபுராஹீம் நபிமூலம் தனக்கும் தன் ஆட்சிக்கும் கேடுவரும் என்பதை அறிந்த நம்ரூத் பலசூழச்சிகளை செய்துஅவர்களை அழிக்க முயற்ச்சித்தான். ஆனால் ஒன்றும் பயனளிக்கவில்லை.

பலமுறை இபுராஹீம் நபியவர்கள் “சிலை வணக்கத்தை விட்டுவிடுங்கள். இறைவன் என்பவன் ஒருவனே” என்று வலியுறுத்தியும் கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் திருவிழாவிற்கு சென்றார்கள். அத்தருவாயில் நம்நபியவர்கள் அனைத்து சிறுசிலைகளை  உடைத்துவிட்டு பெரியசிலையை மட்டும் விட்டுவைத்தாhர்கள். இதனால் கடும்சினம் கொண்ட நம்ரூத் என்பவன் நெருப்புக்குண்டத்தில் போட “நெருப்பே! இப்ராஹீமுக்குச் சுகந்தரக்கூடிய விதத்தில் நீ குளிர்ந்து விடு” என்று நாம் கூறினோம் என்ற திருமறையின் வசனப்படி நெருப்புக்குண்டம் பூஞ்சோலையாக மாறியது நெருப்புக்குண்டத்திலிருந்து மீட்சியடைந்தப்பின் தன் நாட்டைவிட்டு வெளியேறி அருகில் உள்ள நாட்டு மன்னனின் மகள் ஹஜ்ரத் ஸாரா அம்மையாரை மணந்து தங்களது 120 வயதில் இஸ்ஹாக் நபியவர்களையும் ஹஜ்ரத் ஹாஜா அம்மையாரை மணந்து தங்களது 99 ஆம் வயதில் ஹஜ்ரத் இஜ்மாயீல் நபியவர்கள் பிறந்தார்கள்.

மேலும் இறைத்தூதர் அவர்கள் இறையின் கட்டளைக்கு அடிபணிந்து தங்களது பிரியமகன் இஸ்மாயீல் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களை பலியிட துணிந்ததை பாராட்டி “கலீலுல்லாஹ்”   (இறை நேசர்) என்று புகழாரம் சூட்டினான் வல்லோன்.

இபுராஹீம் நபியவர்களும் இஸ்மாயீல் நபியவர்களும் இறையை வணங்குவதற்கு இறை ஆலயத்தை எழுப்பி “எங்களுடைய இரட்சகனே! எங்களிடம் இருந்து இதனை ஏற்றுக் கொள்வாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்.

விருந்தாளியின்றி உண்ணாதவரும், முதன் முதலில் 80 வது வயதில் கத்னா செய்யப்பட்டவரும் லுங்கி உடுத்தியவரும், ஹஜ் உடைய கிரிகைகளை நிறைவேற்றியவரும், குர்பானி கொடுத்தவரும் மரணித்தவர்களை ஹயாத்தாக்கும் வல்லமை பெற்றவரும், மறுமைநாளில் வெள்ளாடை அணிந்து வருபவரும் மீசையை வெட்டி நகத்தை அறுத்தவரும், மிஸ்வாக் செய்வதிலும் தலைவாரி வாய்கொப்பளித்து, நாசிக்கு நீர் செலுத்துவதிலும்  முந்தியவர்கள் இவர்கள் தான். எனவேதான் இறைவன் மனிதர்களிலே உம்மை இமாமாக ஆக்கினோம் என்று நவின்றான்.

வயோதிக பருவத்தை அடைந்த இப்ராஹீம் நபியவர்கள் தங்களின் 195 ம் வயதில் ஸரியாவில் காலமாகி அங்கேயே நல்லடக்கம் செய்யப் பட்டார்கள். “இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்”.

Top