| |
|
|
நபி
நூஹ்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
ونوحا اذ نادى من قبل فاستجبنا له فنجيناه واهله من الكرب العظيم -
الانبياء: 76
"நூஹ்" ஐயும் (நபியாக அனுப்பிவைத்தோம்)நூஹ்
நபியவர்கள் இதற்கு முன்னர் செய்து கொண்டிருந்த பிரார்த்தனையை அவர்களுக்காக
நாம் அங்கீகரித்துக்கொண்டு அவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும்
பெருங் கஷ்டத்திலிருந்து இரட்சித்துக் கொண்டோம்.
நபி நூஹ்
அலைஹிஸ்ஸலாம் அவர்கள்
இத்ரீஸ் நபியுடைய பேரரும் லாமக் உடைய மகனுமாவார்கள். இவர்களின் இயற்பெயர்
அப்துல் கஃப்பார் عبد الغفار என்பதாகும். நபி நூஹ்
அலைஹிஸ்ஸலாம்
அவர்கள் 200 வருடங்களை கடந்த பின்பு தான் நபித்துவம் வழங்கப்பட்டது.
அப்பொழுது அவர்கள் மக்களைப் பார்த்து
يقوم اعبدوا الله مالكم من اله غيره -
الاعراف : 59
"என்னுடைய சமூகத்தாரே! நீங்கள் அல்லாஹ்வை வணங்குங் கள்.அவனைத்தவிர வேறு
நாயன் உங்களுக்கு இல்லை" என்று தவ்ஹீத் என்னும் ஓர்மைப்பாட்டினை
கூறினார்கள். இதை செவியுற்ற அன்றைய அரசனாக இருந்த தர்மசீலும் அவனை அடுத்து
வந்த கொடுமை மிகுந்த அரசர்களும் அவர்களை கடுமையான
நோவினைக்குள்ளாக்கினார்கள்.
صام نوحا - الدهر كله الا يوم عيد الفطر ويوم الاضحى
"நபி நூஹ்
அலைஹிஸ்ஸலாம்
நோன்பு பெருநாள் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் தவிர்த்து அனைத்து நாட்களும்
நோன்பு நோற்பார்கள்". அவர்கள் உம்ரா, அஜ்வத், வாலிஆ என்ற பெண்களை
மணந்திருந்தார்கள். இவர்களின் மக்கள் ஹாம்,ஸாம், யாஃபித் என்பவர்களாவார்கள்.இதில்
யாஃபிதின் கூட்டத்திலிருந்துதான் யஃஜூஜ்,மஃஜூஜ் வழிக்கூட்டம் தொடங்கும்
என்று பின் வரும் நபி மொழி நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
ولد لنوح سام حام ويافث ، فولد لسام العرب وفارس والروم والخير فيهم. وولد
ليافث يأجوج، ومأجوج ، والترك ،
والسقالبة ولاخير فيهم. وولد لحام القبط والبربر والسودان
நூஹ் நபியின் கூட்டத்தார் அவர்களை மிகவும்
வேதனைபடுத்தியபோது
رب لا تذر على الارض من الكفرين ديارا - نوحا: 26
"என் இரட்சகனே! நிராகரிப்போரிலிருந்து பூமியில்
வசிக்க ஒருவரையும் நீ விட்டு வைக்காதே!" என்று இருகரமேந்தி இறைவனிடம்
இறைஞ்சினார் கள். இவ்விறைஞ்சுதலுக்கு இறைவன் பதிலளித்தான். நீங்கள் கப்பலை
தயார் செய்யுங்கள்.
حتى اذا جاء امرنا وفار التنور قلنا احمل فيها من كل زوجين اثنين
இறுதியாக நம்முடைய கட்டளை வந்து அடுப்பும் பொங்கிய
போது (நூஹே) ஒவ்வொன்றிலிருந்தும் (ஆண், பெண் ஆகிய) ஜோடி ஜோடியாக அதில் நீர்
ஏற்றி கொள்வீர்களாக! என்று இறைவன் கட்டளையிட்டான். அதன் பின்னர் தூஃபான்
என்ற பெருவெள்ளம் வந்தது.இதில் மக்கள் அழிந்தனர். கப்பலில் உள்ளவர்களை
மட்டும் பாதுகாக்கப்பட்டார்கள.அதன் பின்னர் அந்த கப்பல் முஹர்ரம் பிறை 10-
ல் ஜூத் என்ற மலையில் ஒதுங்கியது. நூஹ் நபியவர்கள் 950 வருடங்களாக நபியாக
வாழ்ந்து இவ்வுலகை விட்டும் பிரிந்து இறையடி சேர்ந்தார்கள். இவாகளின் புனித
கபுர் ஷரீஃப் ஹரம் ஷரீஃபில் உள்ளது என்று வரலாறுகள் குறிப்பிடுகிறது.
|
 |
|
|